Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கிழக்கு மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை.

-அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு நலன்கருதி ஆழ்கடல் இயந்திரப் படகுகளுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர வாக்குறுதியளித்துள்ளார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (18) புதன்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை குறித்த அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து மீனவர்களின் சமகால பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் வகையில் கலந்துரையாடினார். இதன்போது பிரதி அமைச்சரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக மேற்படி வாக்குறுதியளிக்கப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீனிபிடிக்கச் சென்று காணாமல் போன கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் மீட்கும் பணியில் மாலைதீவில் ஈடுபட்டிருந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் குறித்த மீனவர்களின் கசப்பான கடல் அனுபவத்தை கேட்டறிந்தபோது  இம்மீனவர்கள் காணமல் போனமைக்கு பிரதான காரணியாக தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையே என்பதை உணர்ந்தார்

இதன்விளைவாக பிரதி அமைச்சர் மாலைதீவிலிருந்து வருகை தந்து கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரை சந்தித்து மீனவர்கள் உயிராபத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தியதோடு இதுபோன்ற நிகழ்வகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் ஆழ்கடல் இயந்திரப் படகுகளுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தொலைத்தொடர்பு சாதனங்களை மிக விரைவில் கொள்வனவு செய்து வழங்குவதாக பிரதி அமைச்சரிடம் வாக்குறுதியளித்தார்.

குறித்த தொலைத்தொடர் சாதனங்களை மீனவர்களுக்கு வழங்குவது தொடர்பாக மீனவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கும் எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இச்சந்திப்பின்போது இணக்கம் தெரிவித்தார்.

இதேநேரம் ஒலுவில் துறைமுக படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரெஜ சயிறு கப்பல் எரிபொருள் நெருக்கடி காரணமாக வேலை தாமதமாகியுள்ளமையினால் மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் இதன்போது எடுத்துக் கூறினார். குறித்த மண்ணகற்றும் பணிக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதனால் உடனடியாக இன்றிலிருந்து மேற்படி பணியினை துரிதப்படுத்துவதற்;கான  பணிப்புரையினை பிரதி அமைச்சர் முன்னிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன தலைவருக்கு வழங்கினார்

இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தமைக்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு மீனவர்கள் சார்பில் பிரதி அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget