Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

வில்பத்து விவகாரம்; ஜனாதிபதி எடுத்த முடிவினை நிறுத்த வேண்டும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

-அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
வில்பத்து வனப் பிரதேசத்தை விஸ்தரிப்பதனால் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல கிராமங்கள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி எடுத்த முடிவினை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை பாதுகாக்கும் வகையில் அதன் எல்லையை விஸ்தரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வனப் பிரதேசங்களை பாதுகாப்பதை வரவேற்கின்றோம் ஆனால் அதன் பெயரில் முஸ்லிம் கிராமங்களை குறிவைத்து காணிகள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கௌ;ள முடியாது. வில்பத்து பிரதேசத்தை அண்மித்து காணப்படும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம் பூர்வீக கிராமங்களான பாலைக்குளி, மறிச்சிக்கட்டி, கரடிக்குளி போன்ற கிராமங்கள் வில்பத்து வன எல்லை விஸ்தரிப்பினால் அபகரிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற கடந்தகால யுத்தத்தின்போது இப்பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டார்கள். இதனால் பல்வேறு பிரதேசங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள். யுத்த முடிவின் பின்னர் நிலவும் அச்சமற்ற தற்போதைய சூழ்நிலையில் தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர். இதனை இனவாதக் கண்கொண்டு தடுக்கும் வகையில் செயற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களை அபகரிப்பதை ஒரு இனவாதச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. யுத்தத்தின் அவலங்களை அனுபவித்த இம்மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தமது இடங்களை நாடிவருகின்றபோது அவர்களை மீள்குடியேற்ற காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காது பொடுபோக்குத் தனமாக செயற்படுகின்றனர்.

கடந்த மஹிந்த அரசின் தொடர்;ச்சியான இனவாத செயற்பாட்டால் அவரின் அரசின் மீது நம்பிக்கை இழந்த முஸ்லிம்கள் இவ்வரசை உருவாக்குவதற்காக பெரும் ஆதரவு வழங்கினர். இருந்த போதிலும் 'பழைய குருடி கதவைத் திறடி' எனக்கூறுவது போல் இந்த நல்லாட்சி அரசிலும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிராக முடிக்கிவிடப்படுகிறது.

நல்லாட்சி அரசை உருவாக்கிய முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம்இ பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் அக்கறை செலுத்தாது ஜனாதிபதி  குறித்த விடயம் தொடர்பாக அதிக அக்கறை காட்டுவது வியப்பாகவுள்ளதுடன் இந்நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. 

வில்பத்து விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ அல்லது அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்திஇ நியாயமான முறையில் இம்மக்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்;.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget