Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இன்றுமுதல் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று (06) முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் குறிப்பிட்டார்.

விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக 5 மில்லியன் டொலர் செலவாவதாகவும் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அத்தோடு, நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் சீன நிறுவனம் ஒன்று இதன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கூறினார்.

புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற விமான ஓடுபாதை 3335 மீற்றர் நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் 3 மாதங்களுக்கு இவ்வாறு விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget