Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கட்டாரில் இலங்கையின் ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக்கழகம் புளு ரைடர் கிறிக்கட் தொடரை கைப்பற்றி சம்பியனானது!

-கட்டாரிலிருந்து எம்.ஏ.அக்மல் சிபாக்-
கட்டாரில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக்கழகம் 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ” புளு ரைடர் கிறிக்கட் தொடரை கைப்பற்றி  சம்பியனானது.

கட்டாரில் தொழில் புரியும் வீரர்களை உள்ளடக்கிய 16 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  ” புளு ரைடர் கிறிக்கட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை  கட்டார் தொழிற்சாலைகள் பிரதேச மைதானத்தில் நடைபெற்றது.

ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக்கழகத்திற்கும் லயன்ஸ் ஒப் சிற்றி விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக் கழகத்தினர்  முதலில் துடுப்பெடுத்தாடி 7 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்கள் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் ஒப் சிற்றி விளையாட்டுக்கழகத்தினர்  7 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டனர்.

இறுதிப் போட்டியில் ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக்கழகம் 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினையும்  80000 ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டியில் ஈஸ்டேன் பேர்ள் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த .எஸ்.எம்.எம்.றியாஸ் சிறப்பாட்டக் காரரராகவும் அதே கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் நிகாஸ் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்

இத்தொடரின்  (சாம்பியனாக)வெற்றிக்காக உழைத்த அணித் தலைவர் MS RIFAN (dhoni) , அணி வீரர்கள் hakeem,aasath,faiz,riyas,saheer,ramzath,fowmiyas,insaaf,rifan,aslam,nikkas,maboos
மற்றும்  ஈஸ்டர்ன் பேர்ல்ஸ்  நிருவாகத்தினருக்கும் மற்றும் Smm RISAN விசேடமாக AM RISAN ஆகியோர்க்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget