Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்கள சிறந்த சேவையாளர்களுக்கு பாராட்டும்,கௌரவமும்!

-யூ.கே. காலித்தீன்-
அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிந்து 2016ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய அனைத்து உத்தியோத்தர்களையும் பாராட்டும் வகையிலும், இவ்வாண்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையிலும் நடாத்தப்பட்ட பிரியாவிடை ஒன்றுகூடல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, கட்டடங்கள், கிராமிய கைத்தொழில், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட காரியலத்தில் நேற்று (10) நடைபெற்றது. 

இதில் சட்டம், ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி வண்ணியசிங்க, கிராம அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா ஆகியோர் கௌரவ விருந்தினராகவும்,  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா உட்பட மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget