Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

33 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸாஹிராவின் பௌதீக ஆசான் இஸ்மாயில்!

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் ,கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 80 81 ஆம் ஆண்டில்  பௌதீக விஞ்ஞான பட்டம் பெற்று விஞ்ஞான பட்டதாரியாக 05.08.1984 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை ஸாஹிராக் கல்லூரியில் தனது ஆசிரியர் சேவையினை ஆரம்பித்து பின்னர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தனது சேவையினைத் தொடர்ந்து பின்னர் தான் கல்வி கற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கற்பித்தல் நடவடிக்கையில். இணைந்து கொண்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவின் பகுதித் தலைவராக கடமையாற்றி உயர்தர விஞ்ஞானப் பிரிவில் தன்னாலான பல சேவைகளை செய்திருந்தார்.

பௌதீக பாடத்துறையில் மிகவும் சிறந்த ஆசிரியராக இப்பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்கும் இவ் ஆசான்  தனது 33 வருட ஆசிரிய சேவைக் காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகின்றார். இம்மாணவர்கள் சர்வசேத்திலும் தேசியத்திலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1975 ஆம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் இலங்கையில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய கல்விப் பொதுத்தராத பத்திர ( NCGE) பரீட்சையில் கல்லூரி மட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும்  முதல் நிலை மாணவனாக தெரிவு செய்யப்பட்டு இக்கல்லூரிக்கும் இப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

கல்வித்துறையில் மாத்திரம் சாதனை படைக்காமல் விளையாட்டு துறையிலும் இவர் பல சாதனைகளையும் புரிந்துள்ளார். இக்கல்லூரியின் உதைபந்தாட்டக்குழு மாவட்ட மட்டத்தில் சம்பியனாவதற்கும் கால்கோளாக உதைபந்தாட்ட கோள் காப்பாளராக சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.
கராட்டி துறையில் கறுப்பு பட்டிபெற்றுள்ள இவர், கிழக்கு மாகாண ரீதியாக 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற கராட்டி போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

 இவ் ஆசானின் வாழ்க்கை சிறக்கவும் எதிர்காலத்தில் சமூகத்தில் பல்வேறு துறைகளிலும் தன்னை வியாபித்து தனது மனைவி மக்கள் சுற்றத்தாருடனும் மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தின்றோம்.
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget