Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கடலில் நீராடிய 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

மூதூர் ஹபீப் கடற்கரையில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

திஹாரி பகுதியிலிருந்து மூதூருக்கு சென்றிருந்த இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

19 வயதான இரண்டு பேரும் 16 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.facebook.com/kalasemnet/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget