Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதில் கோர விபத்து, 3 சிறார்கள் ஸ்தலத்தில் மரணம் (Live VIDEO)

-யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர்-
இன்று (30) அதிகாலை 5.30 மணியளவில் சாய்ந்தமருது பிரதான வீதியில் இடம்பெற்ற  பாரிய விபத்தில் ஸ்தலத்தில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்,

இது தொடர்பாக தெரியவருவதாவது...

புனித உம்றா கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பிய பாலமுனை, ஹுஸைனியா நகர் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்றை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஏற்றிவந்த வேன் ஒன்று,
சாய்ந்தமருது பிரதான வீதி, பொலிவேரியன் கிராம சந்தியில் கல்முனை சாலைக்கு சொந்தமான இ.போ.ச பஸ் வண்டியுடன் மோதியதாலேயே
இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வேனில் பயனித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹபீப் ஸைமி (03), ஏ.எம். முஹம்மட் (04), ஏ.எம் ராக்கி (09) ஆகிய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மேலும் 9 பேர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்சிகளின் தொகுப்பு கீழே வீடியோ காட்சியாக தரப்படுகின்றது.

♨  சாய்ந்தமருதில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி CCTV காட்சிகளுக்கு கீழே தரப்பட்டுள்ள Link ஐ அழுத்தவும் 
https://www.youtube.com/watch?v=SY-yeP4tJHQ&feature=youtu.be 

 வீடியோ

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget